அத² ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ அத்தியாயம் ௧

த்⁴ருʼதராஷ்ட்ர உவாச
1 த⁴ர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ꞉ । மாமகா꞉ பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥
த்⁴ருதராஷ்ட்ர³ன் சஞ்சயனிடம் கேட்கிறார், புண்ணிய பூ⁴மியான குருக்ஷேத்ர³ம். இங்கு ஒருங்கே கூடியிருந்தவர்களும், யுத்தம் செய்ய விரும்பியவர்களுமான என்னுடைய புதல்வர்களும் மற்றும் தம்பி பாண்³டுவின் புதல்வர்களும் என்ன செய்தார்கள்?
ஸஞ்ஜய உவாச
2 த்³ருʼஷ்ட்வா து பாண்ட³வானீகம்ʼ வ்யூட⁴ம்ʼ து³ர்யோத⁴னஸ்ததா³ । ஆசார்யமுப ஸங்க³ம்ய ராஜா வசனமப்³ரவீத் ॥
சஞ்சயன் கூறுகிறார் - அப்பொழுது ராஜா து³ர்யோத⁴னன் அணிவகுத்து  நிறுத்தப்பட்டிருந்த பாண்³டவர் படையைப் பார்த்ததும் த்³ரோணாச்சார்யாரை  அணுகி இந்த வார்த்தையைக் கூறலானான்.
3 பஶ்ஶைதாம்ʼ பாண்டு³-புத்ராணாம்ʼ ஆசார்ய மஹதீம்ʼ சமூம் । வ்யூடா⁴ம்ʼ த்³ருபத³-புத்ரேண தவ ஶிஷ்யேண தீ⁴மதா ॥
ஓ ஆச்சார்யா! பாண்டு³ புத்திரர்களின் இந்த³ மிகப்பெரிய படையைப் பார். த்³ருபதராஜனின் குமாரன் த்⁴ருஷ்ட்த்³யும்னன் உன்னுடைய சீடனான, பு³த்³தி⁴சாலி இந்த சேனையைத் தயார் செய்து³ள்ளார்.
4 அத்ர ஶூரா மஹேஷ்வாஸா꞉ பீ⁴மார்ஜுன-ஸமா யுதி⁴ । யுயுதா⁴னோ விராடஶ்ச த்³ருபத³ஶ்ச மஹாரத²꞉ ॥
5 த்⁴ருʼஷ்டகேதுஶ்சேகிதான꞉ காஶி-ராஜஶ்ச வீர்ய-வான் । புரு-ஜித் குந்தி-போ⁴ஜஶ்ச ஶைப்³யஶ்ச நர-புங்க³வ꞉ ॥
6 யுதா⁴மன்யுஶ்ச விக்ராந்த꞉ உத்தமௌஜாஶ்ச வீர்ய-வான் । ஸௌப⁴த்³ரோ த்³ரௌபதே³யாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதா²꞉ ॥
இந்த சேனையில் எல்லோரும் மஹா ரதி²க³ளே. சூரர்க³ள், வீரர்க³ள், பெரிய வில்லாளிக³ள் பீ⁴மார்ஜுனனுக்கு சமமாக போராடுபவர்களாக இருக்கிறார்கள். யுயுதான் (ஸாத்யகி), விராடன், த்⁴ருபத³ன், சிசுபாலனின் மகன் த்⁴ருஷ்ட⁴கேது, யது³ வம்சத்தின் சேகிதான், பீ⁴மனின் மாமனார் காசிராஜன், குந்திபோ⁴ஜானின் மகன் புருஜித், குந்திபோ⁴ஜா, கேகயனின் தந்தை ஷைப்யன், சுப⁴த்³ரை மகன் அபி⁴மந்யு, மற்றும் த்³ரௌபதி³யின் ஐந்து புதல்வர்கள் ப்ரதிவிந்த்⁴யா, ஸ்ருதசோமா, ஸ்ருதகீர்த்தி, ஷதானீக, ஸ்ருதக்ரியா.
7 அஸ்மாகம்ʼ து விஶிஷ்டா யே தான் நிபோ³த⁴ த்³விஜோத்தம । நாயகா மம ஸைன்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம்ʼ தான் ப்³ரவீமி தே ॥
ஓ ஆச்சார்யா! நம்மிடத்தில் ப்ரதா³னவர்களையும் கூறுகிறேன் கேள்! என்னுடைய சேனையின் தலைவர்களை உனக்கு நினைவு படுத்துகிறேன்.
8 ப⁴வான் பீ⁴ஷ்மஶ்ச கர்ணஶ்ச க்ருʼபஶ்ச ஸமிதிம்ʼ-ஜய꞉ । அஶ்வத்தா²மா விகர்ணஶ்ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ॥
தாங்கள், பீ⁴ஷ்மர், கர்ணன், யுத்தத்தில் வெற்றி பெறும் க்ருபா, அஸ்வத்தாமா, விகர்ண (துர்யோத⁴னன் தம்பி), ஸோமத³த்தனின் மகன் பூ⁴ரிஸ்ரவஸ்.
9 அன்யே ச ப³ஹவ꞉ ஶூரா꞉ மத³ர்தே² த்யக்த-ஜீவிதா꞉ । நானா-ஶஸ்த்ர-ப்ரஹரணா꞉ ஸர்வே யுத்³த⁴-விஶாரதா³꞉ ॥
எளுக்காக உயிரை விடத் தயாராய் உள்ள பல சூரர்களும், பற்பல ஆயுதங்களுடன் போராடுவதில் வல்லவர்கள். யுத்தத்தில் நிபுணர்கள்.
10 அபர்யாப்தம்ʼ தத³ஸ்மாகம்ʼ ப³லம்ʼ பீ⁴ஷ்மாபி⁴-ரக்ஷிதம் । பர்யாப்தம்ʼ த்வித³மேதேஷாம்ʼ ப³லம்ʼ பீ⁴மாபி⁴-ரக்ஷிதம் ॥
பீ⁴ஷ்மரால் காக்கப்பட்ட நம்முடைய அந்த சேனை போதாது. ஆனால் பீ⁴மனால் காக்கப்பட்ட இவர்களின் இந்த சேனை போதுமானது.
11 அயனேஷு ச ஸர்வேஷு யதா²-பா⁴க³மவ-ஸ்தி²தா꞉ । பீ⁴ஷ்மமேவாபி⁴ ரக்ஷந்து ப⁴வந்த꞉ ஸர்வ ஏவ ஹி ॥
அனைத்துப் போர்முனையில் தமக்கு கொடுத்த இடங்³களில் இருந்துக் கொண்டு நீங்கள் எல்லோரும் பீ⁴ஷ்மரை தவறாமல் காப்பாற்ற வேண்டும்.
12 தஸ்ய ஸம்ʼ-ஜநயன் ஹர்ஷம்ʼ குரு-வ்ருʼத்³த⁴꞉ பிதாமஹ꞉ । ஸிம்ʼஹ-நாத³ம்ʼ வினத்³யோச்சை꞉ ஶங்க²ம்ʼ த³த்⁴மௌ ப்ரதாப-வான் ॥
குரு வம்ஸத்தில் முதியவரான பாட்டனார் பீ⁴ஷ்மர், துர்யோத⁴னனுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் சிங்கம் போல் உரக்க க³ர்ஜித்து எதிரிகளுக்கு கவலை உண்டாகும் படி சங்கை ஊதி³னார்.
13 தத꞉ ஶங்கா²ஶ்ச பே⁴ர்யஶ்ச பணவானக-கோ³முகா²꞉ । ஸஹஸைவாப்⁴யஹன்யந்த ஸ ஶப்³த³ஸ்துமுலோ(அ)ப⁴வத் ॥
அதற்குப் பிறகு சங்குகளும், பே⁴ரிகைகளும் தம்ப³ட்டம், பறை, கொம்பு³க³ளும் ஒருங்கே³ முழங்கி³ன. அந்த ஒலியே மிக ப³யங்கரமாக இருந்த³து⁴.
14 தத꞉ ஶ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³னே ஸ்தி²தௌ । மாத⁴வ꞉ பாண்ட³வஶ்சைவ தி³வ்யௌ ஶங்கௌ² ப்ரத³த்⁴மது꞉ ॥
அதன் பிறகு நான்கு³ வெள்ளை குதிரைக³ள் பூட்டிய பெரிய ரத³த்தி²ல் இருந்த³ க்ருஷ்ணனும் மற்றும் அர்ஜுனனும் ச்ரேஷ்ட² சங்குகளை முழங்கி³னார்க³ள்.
15 பாஞ்சஜன்யம்ʼ ஹ்ருʼஷீகேஶோ தே³வ-த³த்தம்ʼ த⁴னம்ʼ-ஜய꞉ । பௌண்ட்³ரம்ʼ த³த்⁴மௌ மஹாஶங்க²ம்ʼ பீ⁴ம-கர்மா வ்ருʼகோத³ர꞉ ॥
க்ருஷ்ணன் சமுத்திரத்தில் இருந்த³ பாஞ்ச²ஜனன் என்ப அரக்கனை தானே கொன்று தந்த பாஞ்சஜன்ய³ என்ப சங்கை ஊதினார். அர்ஜுனன் ஸ்வர்க³த்தில் இருந்து இந்த்³ரன் கொடுத்த தேவதத்த³ என்ப³ சங்கை³ ஊதி³னான். தீயவர்க³ளுக்கு ப⁴யத்தை²யும், நல்லவர்க³ளுக்கு அறிவுரை கொடுக்கும் பீ⁴ம சேனன் பௌண்ட்³ரம் என்ப³ பெரிய சங்கை ஊதி³னான்.
16 அனந்த-விஜயம்ʼ ராஜா குந்தீ-புத்ரோ யுதி⁴ஷ்டி²ர꞉ । நகுல꞉ ஸஹ-தே³வஶ்ச ஸுகோ⁴ஷ-மணி-புஷ்பகௌ ॥
குந்தியின் மகன் யுதிஷ்டி⁴ர ராஜன் அனந்த விஜயன் என்ற சங்கை ஊதி³னான். நகுலன் ஸுகோஷம் என்ற சங்கை ஊதி³னான். ஸஹதே³வன் மணி புஷ்பம் என்ற சங்கை ஊதி³னான்.
17 காஶ்யஶ்ச பரமேஷ்வாஸ꞉ ஶிக²ண்டீ³ ச மஹாரத²꞉ । த்⁴ருʼஷ்ட-த்³யும்னோ விராடஶ்ச ஸாத்யகிஶ்சாபராஜித꞉ ॥
18 த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஶ்ச ஸர்வஶ꞉ ப்ருʼதி²வீ-பதே । ஸௌப⁴த்³ரஶ்ச மஹாபா³ஹு꞉ ஶங்கா²ன் த³த்⁴மு꞉ ப்ருʼத²க்-ப்ருʼத²க் ॥
ஓ த்⁴ருதராஷ்ட்ர³ராஜனே! ச்ரேஷ்ட² வில்லாளியான காசி ராஜனும், மஹா ரதி²யான சிகண்டி⁴யும், திருஷ்ட⁴த்³யும்னனும், விராடமன்னனும், தோல்வியே காணாத³ ஸாத்யகியும், த்ருபத³ ராஜனும், த்ரௌபதி⁴யின் புதல்வர்க³ளும், நீண்³ட³ பு⁴ஜங்க³ளை உடை³ய அபி⁴மந்யு இவர்க³ள் எல்லோரும் ஒவ்வொருவராக தம்முடைய சங்குகளை ஊதி³னார்க³ள்.
19 ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம்ʼ ஹ்ருʼத³யானி வ்யதா³ரயத் । நப⁴ஶ்ச ப்ருʼதி²வீம்ʼ சைவ துமுலோ வ்யனு-நாத³யன் ॥
அந்த³ மிகு³ந்த³ ஒலி ஆகாஶத்தை²யும் பூ⁴மியையும் எதிரொலியினால் நிறைந்து³ நூறு கௌரவர்க³ளின் ஹ்ருத³யங்³க³ளை அடி³த்து பிளக்க செய்தது.
20 அத² வ்யவஸ்தி²தான் த்³ருʼஷ்ட்வாதா⁴ர்தராஷ்ட்ரான் கபி-த்⁴வஜ꞉ । ப்ரவ்ருʼத்தே ஶஸ்த்ர-ஸம்பாதே த⁴னுருத்³யம்ய பாண்ட³வ꞉ ॥
21 ஹ்ருʼஷீகேஶம்ʼ ததா³ வாக்யம்ʼ இத³மாஹ மஹீ-பதே । ஸேனயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம்ʼ ஸ்தா²பய மே(அ)ச்யுத ॥
ஓ துரையே! பின்னர் போராட்டம் ஆரம்பி³க்கும் பொழுது³ தயாராய் நின்ற கௌரவர்க³ளை பார்த்து² அனுமன் கொடி³யை உடை³ய அர்ஜுனன் வில்லை வளைத்து² எடு³த்து²க்கொண்டு³ க்ருஷ்ணனிட³ம் வந்து³ கூறினான்."ஓ அச்யுத ! என்னுடை³ய ரத³த்தை² இரண்டு³ சேனைக³ளின் நடு³வே நிறுத்து²".
22 யாவதே³தான் நிரீக்ஷே(அ)ஹம்ʼ யோத்³து⁴-காமானவ-ஸ்தி²தான் । கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யம்ʼ அஸ்மின் ரண-ஸமுத்³யமே ॥
போர் புரிய வந்த³ இவர்க³ளை எல்லாம் நான் ஒரு முறை பார்க்கிறேன். இந்³த போராட்டத்தில் நான் யார் யாருட³ன் யுத்³த⁴ம் செய்ய வேண்டு³ம்?
23 யோத்ஸ்யமானானவேக்ஷே(அ)ஹம்ʼ ய ஏதே(அ)த்ர ஸமாக³தா꞉ । தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴꞉ யுத்³தே⁴ ப்ரிய-சிகீர்ஷவ꞉ ॥
யுத்தம் செய்ய விரும்பி³ வந்த³வர்க³ளை நான் பார்க்க வேண்டு³ம். எந்த³ அரசர்க³ள் பு³த்³தி⁴ கெட்ட துர்யோத⁴னனுக்கு போராட்டத்தில் விஜய கிடை³க்க விரும்பி³ இங்கு³ செயல் படு³கி³றார்க³ள். அவர்க³ளை நான் பார்க்க வேண்டு³ம்.
24 ஏவமுக்தோ ஹ்ருʼஷீகேஶோ கு³டா³கேஶேன பா⁴ரத । ஸேனயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ॥
25 பீ⁴ஷ்ம-த்³ரோண-ப்ரமுக²த꞉ ஸர்வேஷாம்ʼ ச மஹீ-க்ஷிதாம் । உவாச பார்த² பஶ்ஶைதான் ஸமவேதான் குரூனிதி ॥
ஓ து³ரையே! அர்ஜுனன் கூறியவாறு க்ருஷ்ணன் உயர்ந்த³ ரத³த்தை² இரண்டு³ சேனைக³ளின் நடு³வே கொண்டு³ வந்து³ அனைத்து² அரசர்க³ளின் நடு³வே பீ⁴ஷ்ம த்³ரோணரின் எதி³ரில் நிறுத்தி² "ஓ அர்ஜுனனே! சேர்ந்தி³ருக்கு²ம் இந்த³ அனைத்து² கௌரவர்க³ளையும் பார்."என்று கூறினான்.
26 தத்ராபஶ்யத் ஸ்தி²தான் பார்த²꞉ பித்ரூʼனத² பிதாமஹான் । ஆசார்யான் மாதுலான் ப்⁴ராத்ரூʼன் புத்ரான் பௌத்ரான் ஸகீ²ம்ʼஸ்ததா² ॥
27 ஶ்வஶுரான் ஸுஹ்ருʼத³ஶ்சைவ ஸேனயோருப⁴யோரபி ।
அங்கு³ இரண்டு³ பக்கம் சேனைக³ளில் தந்தை³யைப் போல் இருப்பவர்க³ளையும், தாத்தாக்க²ளையும், கு³ருநாத³ர்க³ளையும், தாய் மாமன்க³ளையும், அண்ணன் தம்பி³க³ளையும், புத³ல்வர்க³ளையும், பேரன்க³ளையும், சினேகித³ர்க³ளையும் மற்றும் மாமனார்க³ளையும், அன்ப³ர்க³ளையும் அர்ஜுனன் பார்த்தா²ன்.
க்ருʼபயா பரயா(ஆ)விஷ்டோ விஷீத³ன்னித³மப்³ரவீத் ॥
28 தான் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய꞉ ஸர்வான் ப³ந்தூ⁴னவ-ஸ்தி²தான் ।
அங்கு³ கூடி³ இருந்த³ எல்லா உறவினர்க³ளையும் அருகி³ல் பார்த்த² அர்ஜுனன், மிகுந்த³ க்ருபையுட³ன் வருத்த²ம் கொண்டு³ இதை³ பேசலானார்.
த்³ருʼஷ்ட்வேமம்ʼ ஸ்வஜனம்ʼ க்ருʼஷ்ண யுயுத்ஸும்ʼ ஸமுப-ஸ்தி²தம் ॥
29 ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம்ʼ ச பரி-ஶுஷ்யதி । வேபது²ஶ்ச ஶரீரே மே ரோம-ஹர்ஷஶ்ச ஜாயதே ॥
ஓ க்ருஷ்ணா! போர் புரிய விரும்பு³கின்ற இந்த³ ஒவ்வொரு உறவினரையும் பார்த்து² என் அங்க³ங்க³ள் சோர்வடைகி³ன்றன. வாயும் உலர்கி³றது³. அவ்வாறே என் உடலில் நடுக்கம் ஏற்படு³கிறது³. மயிர் சிலிர்ப்பும் ஏற்படு³கி³றது³.
30 கா³ண்டீ³வம்ʼ ஸ்ரம்ʼஸதே ஹஸ்தாத் த்வக் சைவ பரி-த³ஹ்யதே । நச ஶக்னோம்யவ-ஸ்தா²தும்ʼ ப்⁴ரமதீவ ச மே மன꞉ ॥
கா³ண்டீ³வ வில் கையில் இருந்து³ நழுவிக் கொண்டு இருக்கி²றது³. சருமத்தி²ல் எரிச்சல் உண்டா³கிறது³. நேராக நிற்கவும் முடி³யவில்லை. என் மனதும் எங்கோ சுற்றுகி³றது³.
31 நிமித்தானி ச பஶ்யாமி விபரீதானி கேஶவ । நச ஶ்ரேயோ(அ)னு பஶ்யாமி ஹத்வா ஸ்வ-ஜனமாஹவே ॥
ஓ கேசவா! கெட்ட² சகுனங்க³ளைக் காண்கி³ன்றேன். யுத்³த⁴த்தி²ல் என்னவர்க³ளைக் கொ²ன்ற பின் நான் எந்த³ நன்மையையும் காணவில்லை.
32 ந காங்க்ஷே விஜயம்ʼ க்ருʼஷ்ண நச ராஜ்யம்ʼ ஸுகா²னி ச । கிம்ʼ நோ ராஜ்யேன கோ³விந்த³ கிம்ʼ போ⁴கை³ர்ஜீவிதேன வா ॥
ஓ க்ருஷ்ணனே! நான் விஜ்³ஞயத்தை² விரும்ப³வில்லை. ராஜ்³யத்தை²யும் விரும்ப³வில்லை. ஸுக³ங்க³ளையும் விரும்ப³வில்லை. . நமக்கு ராஜ்³யத்தினால் என்ன பயன்? ஸுக போக்³களால் வாழ்வதில் என்ன பயன்?
33 யேஷாமர்தே² காங்க்ஷிதம்ʼ நோ ராஜ்யம்ʼ போ⁴கா³꞉ ஸுகா²னி ச । த இமே(அ)வ-ஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ʼஸ்த்யக்த்வா த⁴னானி ச ॥
நாம் எவர்களுக்கா²க³ அரசும், போக³ங்க³ளும், ஸுக³ங்க³ளும் விரும்ப³த்தக்கனவோ அவர்க³ளே யுத்³த⁴த்தி²ல் எல்லா வகை³யான செல்வத்தை துறந்து³ உயிரையும் துரப்பதற்கு தயாராகி³ நின்று இருக்கிறார்கள்.
34 ஆசார்யா꞉ பிதர꞉ புத்ரா꞉ ததை²வ ச பிதாமஹா꞉ । மாதுலா꞉ ஶ்வஶுரா꞉ பௌத்ரா꞉ ஸ்யாலா꞉ ஸம்ப³ந்தி⁴னஸ்ததா² ॥
ஆச்சாரியார்கள்,தந்தை³யைப் போல் இருப்பவர்கள், மக³ன்கள்,எவ்வித³மே பாட்டனர்க³ள், தாய் மாமன்க³ள்,மாமனார்க³ள், பேரன்க³ள், மைத்துனர்க³ள் மற்றும் உறவினர்க³ள்.
35 ஏதான் ந ஹந்துமிச்சா²மி க்⁴னதோ(அ)பி மது⁴-ஸூத³ன । அபி த்ரைலோக்ய-ராஜ்யஸ்ய ஹேதோ꞉ கிம்ʼ நு மஹீ-க்ருʼதே ॥
ஓ மதுஸூத³னா! மூவுலகும் கிடைத்தாலும் அடி³த்து² நொறுக்கும் இவர்க³ளை கொல்லுவதற்கு எனக்குவிருப்பம் இல்லை. இந்த ஒரு துண்டு பூ⁴மிக்காக³ ஏன் போராட³ வேண்டு³ம்.
36 நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ரான் ந꞉ கா ப்ரீதி꞉ ஸ்யாஜ்ஜனார்த³ன । பாபமேவா(அ)ஶ்ரயேத³ஸ்மான் ஹத்வைதானாததாயின꞉ ॥
ஜனார்த³னா! த்⁴ருதராஷ்ட்ர³ குமார்க³ளைக் கொன்று நமக்கு என்ன ஸந்தோஷம் கிடைக்கிறது? இந்த படு³பாவிக³ளை கொன்றால் நம்மை பாபமே சேரும்.
37 தஸ்மான்னார்ஹா வயம்ʼ ஹந்தும்ʼ தா⁴ர்தராஷ்ட்ரான் ஸ்வ-பா³ந்த⁴வான் । ஸ்வ-ஜனம்ʼ ஹி கத²ம்ʼ ஹத்வா ஸுகி²ன꞉ ஸ்யாம மாத⁴வ ॥
ஆத³லால் நம்ம சம்மந்தி³க³ளாக³ கௌரவர்க³ளை நாம் கொல்லத் தகுதியற்றவர்கள். ஓ மாத⁴வனே நம்மவர்க³ளை நாம் கொன்று எப்படி³ சுகி⁴களாய் இருக்க முடியும்.
38 யத்³யப்யேதே ந பஶ்யந்தி லோபோ⁴ப-ஹத-சேதஸ꞉ । குல-க்ஷய-க்ருʼதம்ʼ தோ³ஷம்ʼ மித்ர-த்³ரோஹே ச பாதகம் ॥
39 கத²ம்ʼ ந ஜ்ஞேயமஸ்மாபி⁴꞉ பாபாத³ஸ்மாந்நிவர்திதும் । குல-க்ஷய-க்ருʼதம்ʼ தோ³ஷம்ʼ ப்ர-பஶ்யத்³பி⁴ர்ஜனார்த³ன ॥
இவர்களின் புத்³தி⁴ பேராசையால் கெட்டிருக்கிறது குல நாஶத்தால் ஏற்படும் குற்றத்தையும் நண்பர்களுக்கு கெடுதல் செய்வதால் ஏற்படும் பாவத்தையும் பார்க்கவில்லை. ஓ ஜனார்த³னா! குல நாஶத்தால் ஏற்படும் குற்றத்தை முன்பே பார்க்கும் நாம் இந்த கெட்ட போராட்டத்தை பின்வாங்குவது பற்றி எதற்கு தெரியவில்லை?.
40 குல-க்ஷயே ப்ரணஶ்யந்தி குல-த⁴ர்மா꞉ ஸனாதனா꞉ । த⁴ர்மே நஷ்டே குலம்ʼ க்ருʼத்ஸ்னம்ʼ அத⁴ர்மோ(அ)பி⁴-ப⁴வத்யுத ॥
குல நாஶத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற வம்ச நடவடிக்கைகளை விடுகின்றான். இந்த வம்ச நடவடிக்கைகளை பின்பற்றாவிடில் தர்மம் அழிந்து குலத்தை அத⁴ர்மம் முழுவதும் ஆக்³ரமிக்கிறது.
41 அத⁴ர்மாபி⁴-ப⁴வாத் க்ருʼஷ்ண ப்ர-து³ஷ்யந்தி குல-ஸ்த்ரிய꞉ । ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண-ஸங்கர꞉ ॥
வ்ருʼஷ்ணி வம்சத்தின் க்ருஷ்ணா! அத⁴ர்மம் பெருகுவதால் வீட்டுக்கு வீடு பெண்கள் நடத்தை கெட்டு போவார்கள்.பெண்கள் நடத்தை கெட்டு போனால் வர்ண கலப்பு உண்டாகிறது.
42 ஸங்கரோ நரகாயைவ குல-க்⁴னானாம்ʼ குலஸ்ய ச । பதந்தி பிதரோ ஹ்யேஷாம்ʼ லுப்த-பிண்டோ³த³க-க்ரியா꞉ ॥
இந்த அசுத்³த⁴ம் குலநாசம் செய்தவர்களையும்,குலத்தவரையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லும். இவர்களுடைய முன்னோர்கள் கூட பிண்³ட தர்ப்பணம்ʼ இவற்றை இழந்து து³ர்க³தியை அடைவார்கள்.
43 தோ³ஷைரேதை꞉ குல-க்⁴னானாம்ʼ வர்ண-ஸங்கர-காரகை꞉ । உத்ஸாத்³யந்தே ஜாதி-த⁴ர்மா꞉ குல-த⁴ர்மாஶ்ச ஶாஶ்வதா꞉ ॥
குல நாசம் செய்பவர்களின் இந்த வர்ண கலப்பு ஏற்படுத்துகின்ற தவறுகளினால் தொன்று தொட்டு வருகின்ற வம்சாவளி நடவடிக்கைகளும் பிறப்பிலிருந்து தோன்றிய தொழில்களும் சாஸ்த்ர கட்டுப்பாடுகளில் இருந்து விலகி பாழாகிறது.
44 உத்ஸன்ன-குல-த⁴ர்மாணாம்ʼ மனுஷ்யாணாம்ʼ ஜனார்த³ன । நரகே நியதம்ʼ வாஸோ ப⁴வதீத்யனு ஶுஶ்ரும ॥
ஓ ஜனார்த³னா! விதி⁴ விதா³னங்க³ளை விட்டு வம்சாவளி நடவடிக்கைகளை செய்த மனித³ர்க³ளுக்கு நிலையான நரக வாசம் ஏற்படுகின்றது என்று நன்றாக கேள்வி பட்டுள்ளோம்.
45 அஹோ ப³த மஹத் பாபம்ʼ கர்தும்ʼ வ்யவஸிதா வயம் । யத்³ராஜ்ய-ஸுக²-லோபே⁴ன ஹந்தும்ʼ ஸ்வ-ஜனமுத்³யதா꞉ ॥
ஐயோ! ராஜ்³யத்தின் இன்ப³ ஆசையால் நம் பந்துக்களையும் கொல்லத் தயாரான நாம் எவ்வளவு பெரிய பாபத்தை செய்யத் துணிந்தவர்கள் ஆனோம்.
46 யதி³ மாமப்ரதீகாரம்ʼ அஶஸ்த்ரம்ʼ ஶஸ்த்ர-பாணய꞉ । தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹன்யு꞉ தன்மே க்ஷேம-தரம்ʼ ப⁴வேத் ॥
எதிர்த்துப் போராடாமலும், ஆயுத³மின்றி இருக்கும் என்னை ஆயுத³ம் ஏந்திய த்⁴ருதராஷ்ட்ர³ குமார்க³ள் போரில் கொன்றாலும் அது எனக்கு அதிக நன்மையே தருவதாக ஆகும்.
47 ஏவமுக்த்வா(அ)ர்ஜுன꞉ ஸங்கே² ரதோ²பஸ்த² உபாவிஶத் । விஸ்ருʼஜ்ய ஸ-ஶரம்ʼ சாபம்ʼ ஶோக-ஸம்ʼவிக்³ன-மானஸ꞉ ॥
இவ்விதம் சொல்லி துக்கத்தினால் கலங்கிய மனதுடைய அர்ஜுனன் அம்புகள் நிறைந்த வில்லை போர்க்களத்தில் எறிந்து விட்டு தேரின் நடுவே அமர்ந்து விட்டான்.

இதி ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉