முதலில் படிப்பதற்கு

நாராயணன்,ஸ்ரீ வேதவியாச வடிவத்தில் 5823 வருடங்களுக்கு முன்பு இந்த பாரத தேசத்தில் அவதரித்தார். வ்யாஸர் மஹரிஷிகள் மனிதர்களின் கல்விக்காக வேதங்களை மேற்கோள் காட்டினார். வேதங்களையும் மிஞ்சும் அளவிற்கு மஹாபாரதத்தை ரசனை செய்தார்.

பஞ்ச பாண்டவர்களின் ப்ரதா³ன கதையை சம்ஸ்கிருத மொழியில் மஹாபாரதம் எல்லோருக்கும், எல்லாவற்றையும் இன்றும் கற்பித்துக் கொடுக்கும் பெரிய சாஸ்திரப் புத்தகமாய் உள்ளது.

பாண்டவர்கள் சூதாட்டத்தில் கௌரவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி வனவாசம்-அக்ஞாத வாசங்களை முடித்துக் கொண்டு வந்து தம்முடைய ராஜ்யத்தை மறுபடியும் கேட்டுக்கொள்கிறார்கள்.

பாண்டவர்களின் தூதனாய் ஸ்ரீ கிருஷ்ணன் கௌரவர்களிடம் வந்து பாண்டவர்களுக்கு ராஜ்யத்தில் பங்கு எவ்வளவு இருப்பினும் அளிக்குமாறு வந்து அறிவுரை கூறுகிறான். கௌரவர்கள் ஒரு துண்டு இடத்தைக் கூட அளிக்காததால் பாண்டவர்-கௌரவர்களின் இடையில் யுத்தம் ஏற்பாடு ஆகியது. 18 நாட்களின் போராட்டம் குருக்ஷேத்திரத்தில் நடந்தது. ரதம் ஏறி போராடும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணனே தேரோட்டியாக போரில் சேர்கிறான். இன்றும் அநேக யுத்த தந்திரங்களில் கிருஷ்ணன் அறிவுரை மற்றும் வழிமுறைகளை அளித்து பாண்டவர்களை யுத்தத்தில் காப்பாற்றுகின்றான். பாண்டவர்கள் வெற்றி எய்தினார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் மேற்பார்வையில் 36 ஆண்டுகள் ராஜ்யத்தில் ஆட்சி புரிந்தார்கள்.

பாண்டவர்-கௌரவர்களின் இந்த கசப்பான யுத்தத்தைப் பற்றி கௌரவர்களின் தகப்பனான திருதராஷ்டிரன் குருடனான காரணத்தால் தன்னுடைய தேரோட்டியான சஞ்ஜயனிடத்தில் கேட்டு அறிந்து கொள்கிறான். குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் பத்து நாட்கள் அருகிலிருந்து பார்த்த சஞ்ஜயன், திருதராஷ்டிரனின் அருகில் வந்து பீஷ்மர் அடிப்பட்டு விழுந்ததைப் பார்த்து பயம் கொண்டு கூறினான். இதனைக் கேட்ட திருதராஷ்டிரன் துவக்கத்திலிருந்து யுத்தத்தில் நடந்த அனைத்தையும் விரிவாகக் கூறுமாறு கேட்டுக்கொண்டான். வ்யாசரின் விசேஷமான அனுக்ரஹத்தினால், தும்பு³ரு
கந்தர்வனான சஞ்ஜயன் அந்த நேரத்தில் யுத்தகளத்தில் எல்லாவற்றையும் கண்டவன் போல், கேட்டவன் போல், போராட்டக்காரர்கள் ஆலோசித்து செய்த³ போது எல்லாவற்றையும் அறிந்தவன் போல் திருதராஷ்டிரனின் எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விரிவாய் பதிலளித்தான். இவ்வாறு யுத்தத்தின் முதல் நாள் துவக்கத்தில் நடந்த அர்ஜூன-கிருஷ்ணனின் பேச்சுவார்த்தையை பகவத் கீதையாக சஞ்ஜயனால் எடுத்துரைக்கப்பட்டது.

இதோ இங்கே இருக்கிறது அறிவுரைகள் மற்றும் கன்னட மொழியில் செய்த அதன் சிறிய சமிக்‍ஷை. இது ஒரு சித்தாந்த விரோதம் இல்லாது எழுதிய சிந்தனையே சேவையாகி என்னுடைய சமர்ப்பணம். இந்தக் கீ³தா² ஸமீக்‍ஷையை நான் பல மொழிபெயர்ப்புகளிலும் வழங்கியுள்ளேன்.

ப்ரார்த்தனை

நாராயணம்ʼ ஸுர-கு³ரும்ʼ ஜக³தே³க-நாத²ம்ʼ ப⁴க்த-ப்ரியம்ʼ ஸகல-லோக-நமஸ்க்ருʼதம்ʼ ச ।
த்ரைகு³ண்ய-வர்ஜ்ஜிதமஜம்ʼ விபு⁴மாத்³யமீஶம்ʼ வந்தே³ ப⁴வக்⁴னம்ʼ அமராஸுர-ஸித்³த⁴-வந்த்³யம் ॥
நாராயணம்ʼ நமஸ்க்ருʼத்ய நரம்ʼ சைவ நரோத்தமம் ।
தே³வீம்ʼ ஸரஸ்வதீம்ʼ வ்யாஸம்ʼ ததோ ஜயமுதீ³ரயே ॥